நிலவில் தடம் வைத்த நாசா
மீண்டும் அங்கே
உலவிடச் செல்கிறது !
ஓரியன் விண்வெளிக் கப்பல்
சீறிக் கொண்டு
செவ்வாய் நோக்கிப் போகும் !
ஆகில நாட்டு விண்வெளி
நிலையத்தில் சற்று
இளைப்பாறிக் கொள்ளும் !
நிலவில் இறங்கித்
தங்குமிடத்தில் களைப்பாறும் !
அங்கிருந்து கிளம்பி
செந்நிறக் கோளில் இறங்கி
சந்ததி பெருக்கும் !
சந்திரனில் இறங்கி விட்டது
இந்தியத் தளவுளவி !
செந்நிறக் கோளில் வணிகச்
சந்தை வைத்திட
சைனாவும் ஜப்பானும்
பாரதமும் ஒருநாள்
ஈரடி வைக்கும் ! நாசாவின்
ஓரியன் விண்கப்பல்
சூரிய மண்டலக் கோள்களைச்
சுற்றப் போகுது
மானிடர் இயக்கி !
முறிவு ராக்கெட் சோதனை வெற்றி ஓரியன் விண்வெளி ஒளிமந்தைத் தேடல் திட்டத்தின் (Abort Motor Testing in Orion Constellation Program) ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது. அந்த வெற்றி ஓரியன் விண்வெளி விமானிகள் 2015 இல் அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சென்று அங்கே தங்கி, நிலவில் ஓய்வெடுத்து அடுத்து 2020 இல் செவ்வாயை அடைந்து மனிதர் பூமிக்குத் திரும்ப வசதி உண்டாக்கும். உந்துகணை ஏவுதல் முறிவு ஏற்பாடு ராக்கெட்டில் எந்த விதப் பழுதுகள் நேரினும் விண்சிமிழைத் துண்டித்துப் பாதுகாப்பாக விமானிகளை நிலத்தில் இறக்கி விடும்."
Saturday, July 31, 2010
Subscribe to:
Comments (Atom)
